search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகமலை வனப்பகுதி"

    • காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்து மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவியது.
    • தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சனூத்து வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்து மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவியது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த அரியவகை மரம், செடிகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த காட்டுத்தீயால் அப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேகமலை வனத்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பல இடங்களில் பரவியதால் வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் சிரமப்பட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்களால் செயற்கையாக காட்டுத்தீ ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×